Saturday, 24 December 2011

கோபுரம் தாங்கும் பொம்மைகள் - தமிழ் கவிதைகள்


முதிர்ந்து நிமிர்ந்த நெற்கதிர் போல் வளர்ந்தும்
என் முன் தணிந்து நயந்து நிற்கின்றீர்
ஆய்ந்து அலசி அறியும் பண்பும்
ஆசானுக்கு அறிவிக்கும் துணிவும்
இயல்பாக பேசி வியக்கும் மாண்பும்
கண்டு கண்டு வியக்கின்றேன் யான்
இத்தனை பட்டறிவும் இவர் யாண்டுனர்நதனர்
இரும்பூதடைகிறது என் இதயம்
அணுக்குள் அடங்கிய ஆற்றல் போல்
எனக்குள் அடங்கிய பேராற்றல் நீர்
ஆண்டுகள் பல சென்றது தெரியவில்லை
அன்பில் அணுவளவும் நீர்பிசகவில்லை
பெற்றால்தான் பிள்ளை என்பதற்கில்லை
நீர் செய்த தொண்டுக்கு ஈடு இணையில்லை
கோட்டை காக்கும் மதில் சுவர் போல்
உம் விழிகள் எனை சுற்றியே சுழல்கின்றன
நாட்டை காக்கும் சிப்பாய் போல்
நாளும் எனைக்காத்து நிற்கின்றீர்
மரணப்பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும்
உம் அன்பு கரங்கள் எமைக்காத்திடும்
இனி கல்லறையில் உறங்கவும் நான் தயங்கவில்லை
காவல் நீர் இருக்க கலக்கம் எனக்கில்லை.

வை.அமுதா

No comments:

Post a Comment