முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி
முகில் கண்டு ஆடும் மயிலுக்கு
போர்வை தந்து மகிழ்ந்தான் பேகன்
சாவா வரம் கொண்ட நெல்லிக்கனியை
தான் உண்ணாமல் தமிழுக்கு ஈந்தான் அதியமான்
இக்கடயேழு வள்ளல்களை யாம் கண்டதில்லை
யாம் கண்ட கலியுக வள்ளல் நீர்
வாக்குறுதி தந்து வழி மறந்து போவோர் பலர்
உங்கள் சொல்லுறுதி கண்டு வியந்தோம் யாம்
தேடாது கிடைத்த அமிழ்தம் போல்
வாராது வந்த மாமழை போல்
எதிர்பாராது உதவிக்கரம் தந்த வள்ளல் நீர்
மாறாது மாறாது உம் குணம் என்றும்
மறையாது மறையாது உம் புகழ் என்றும்
பல்லாண்டு பலாண்டு பலகோடி நூற்றாண்டு
நீர் வாழ்வாங்கு வாழ்ந்திட
அகம் மகிழ்ந்து உளம் நிறைந்து வாழ்த்துகிறேன்
No comments:
Post a Comment