Saturday, 24 December 2011

தேசத்தை தாக்கும் பெரும் புயல்கள் - தமிழ் கவிதைகள்


இருபத்தோராம் நூற்றாண்டில்
இந்தியா பெரும் வல்லரசாம்
உள்ளே அலசிப் பார்த்தேன்
உள்ளம் வெதும்பிப் போனேன்
சாதி சங்கங்களில்
சம்பந்தி போஜனம்
அகிம்சை போராட்டத்தில்
அடிதடி வன்முறையாம்
காவல் தெய்வங்களே
களவு போகும் சம்பவங்கள்
கற்ப்புக்கு விளக்கம் சொல்லும்
சிகப்பு விளக்குகள்
காவல் நிலையங்களில்
கற்புக் களவாடல்
பள்ளிக் கூடங்களில்
பாலியல் பலாத்காரம்
அரைகுறை ஆடைகளில்
ஆடை அணிவகுப்பு
கலைகட்டி நடக்கும்
டாஸ்மாக் வியாபாரம்
அத்தனைக்கும் முத்தாய்ப்பாய்
ஆணி வேரே அசைவது போல்
கரைபுரண்டோடும் கள்ளப்பணம்
தலைவிரித்தாடும் லஞ்ச ஊழல்
நாட்டை கூறு போடும் பிரிவினைவாதம்
ஓட்டை விலை பேசும் ஜனநாயகம்
வாக்கை வேட்டை ஆடும் அரசியல்
நம் தேசம் தாக்கும் பெரும் புயல்கள்

No comments:

Post a Comment