பயிற்று பல கல்வி கற்று
பாரில் பதவி பல பெற்று
ஊரில் பவனி வரும் அதிகாரம் எலாம்
பேரில் நியாயம் பேசிவிட்டு
காரிருள் வாழ்க்கை நடத்துதுங்க
கொடி கட்டி கோஷம் போட்டு
கூடி மக்கள் வந்து சேர
நாடி நாடி நயமாய் பேசி
கோடி நன்மை செய்வது போல்
வெட்டி வார்த்தை பேசி
ஓட்டு வாங்கி பதவி வாங்கி
உயர்ந்த அரசியல் நரிகள் எலாம்
மக்களை வேட்டையாடி வாழுதுங்க
போலி மருந்து போலி சோடா
போலி சோப்பு போலி சாம்பு
அரிசியில் கல்லு மசாலாவில் செங்கல்லு
சர்க்கரையில் ரவை கடுகில் மண்ணு
இரண்டாம் தர பொருளை
முதல் தரமாய் விற்று வியாபாரம் தாரம் நிறைய தன் நகை சேர்க்குதுங்க
பாவத்தின் சம்பளம் மரணம் என்றால்
இப்பாவிகள் கல்லறையை நிரப்ப மாட்டாரா?
பாவிகளை இரட்சிப்பவர் தேவன் அல்லவா
அதனால் தானோ இவர் இன்னும் வாழ்கின்றார்!
தேவன் சிந்திய செந்நீர்
இந்த பாவிகளுக்கு தேநீர்!
No comments:
Post a Comment