Sunday, 25 December 2011

வெகுமதி - தமிழ் கவிதைகள்


மலர் மலர்ந்து மனம் வீச
மனுக் கொடுத்து கேட்கவில்லை
மழையும் காற்றும் வருவதற்கு
அனுமதி சீட்டு ஏதும் இல்லை
குயில் பாடி இசை நிரப்ப
மயில் ஆடி அகம் நிரப்ப
வெகுமதி ஏதும் கேட்க்க வில்லை
ஆற்று வெள்ளம் ஓடி வர
பட்டிமன்றம் போடவில்லை

மரம் காய்த்து கனிகொடுக்க
வரம் ஏதும் ஏற்ப்பதில்லை
தரம் கெட்ட மானிடரோ
அதிகாரம் என்ற பெயரில் அவர்
வெகுமதி பாராமல்
நம் கோரிக்கை மனுக்கள்
துளிகூட நகர்வதில்லை

வெகுமதி பார்த்துத்தான்
தாய் இவரை ஈன்றாளா
வெகுமதி கேட்டுத்தான் இவன்
தாரம் அன்பு கொண்டாளா?

No comments:

Post a Comment