நீண்ட நேரம் காத்திருந்தேன் - என்
இளைய நண்பன் வருகைக்காய்
குறு நாவல் உரையாடல் பின்
காலம் அருதியின் காரணமாய்
வாகனம் நோக்கி விரைந்த என்னை
பார்த்து பூமிக்கு வலிக்கும் என்றான்
புன் முறுவல் பூத்த முகத்தோடு
போதும் உந்தன் பரிகாசம்
உன் கேலி எனக்கு நரகாசம்
என்றே கூறி விடை பெற்று
இரண்டு அடிகள் முன் வைத்தேன்
சட்டென திரும்பினேன் அவன் குரல் கேட்டு
டக்குனு ஒரு கவிதை சொல்லுங்க
என்றே மேவாயை தடவி நின்றான்
நீண்ட நிர்முல வானம் போல்
வெரித்து நின்றேன் அவன் நகை கண்டு
முகவுரை இல்லாமல் வந்தாலும்
நகை முகம் காட்டி எனை பூப்பித்தாய் - உன்
ஓராண்டு கால முகவரியில்
நெஞ்சில் நின்றது ஒரு வரியே
டக்குனு கவிதை உனக்கெழுத - நீ
சட்டென விலகிடும் உறவல்ல !
வை .அமுதா
No comments:
Post a Comment