வறுமையும் ஏழ்மையும்
கைக்கோர்த்து விளையாடி
அன்றாட வாழ்க்கையுடன்
திண்டாடி மன்றாடி
உடலிலும் உள்ளத்திலும்
ஊனம் பெற்றவராய்
வாழும் வன்னையம் பதி
எம் பள்ளி அமர்ந்த பகுதி
பாரில் பல பள்ளி இருப்பினும்
எம்போல் பள்ளி வேறில்லை
தன்னலம் கருதா நிர்வாகம்
தன்னடக்கத்துடன் உழைக்கும் ஆசிரியர்
கல்வியும் ஒழுக்கமும் இரு கண்கள் - இதை
போற்றிப் புகட்டுவதே எம் கடமை - என
நாளும் உறுதியுடன் போராடும்
தன்னம்பிக்கை ஊட்டும் பள்ளி இது
பலமுறை தீக்கு இறையாகி
அரசியலுக்கும் பலியாகி
அதிகாரிகளின் படையெடுப்பு
சுற்றுப்புற ஆக்கிரமிப்பு
பொது மக்களின் அலட்சியம்
பெருகிடும் ஆங்கில மோகம்
இத்தனையும் எதிர் அணி
இருந்து தொடரும் எம் பணி !
No comments:
Post a Comment