Saturday, 24 December 2011

பெண்மை வெல்க ! - தமிழ் கவிதைகள்


மகா சக்தி என்ற உடன்
மண்டியடித்து விழுகின்றாய்
சரஸ்வதி என்ற உடன்
சாஷ்டாங்கமாய் புரண்டு தொழுகிறாய்
மகாலட்சுமி என்ற உடன்
பணம் அள்ளி கொட்டி வணங்குகிறாய்
பெண்ணை மட்டும் இழிவு செய்து
பேரின்பம் காணுகிறாய்
உனை தொட்டிளிட்டவலும் பெண் தானே
உனை கட்டிளிட்டவலும் பெண் தானே
இவளை வணங்க ஏன் மறந்தாய்
போகப் பொருளாய் மாற்றிவிட்டாய்
எறியும் மெழுகாய் ஏறிய விட்டாய்
அறிவை வளர்க்க வேலியிட்டாய்
கருவை சுமக்க கூலியிட்டாய்
அடக்கி ஆளும் ஆணினமே
ஆற்றலை அழிக்க முடியாது
என்ற அறிவியல் தத்துவம் அறிவீரா
மாறும் உலகின் மகத்துவம் உணர்வீர்
வீறு கொண்டு எழும் பெண்ணினம் காணீர்
வீழ்ந்திடும் விரைவில் ஆண்மையின் ஆட்சி
உலகை ஆண்டிடும் இனி மனை மாட்சி !

No comments:

Post a Comment