இரவு தேவதை தன் தேகத்தை மறைக்க
பகலவன் கீழ் வானில் பவனிவர எத்தனிக்க
விடிந்தும் விடியாத வெள்ளேனைப் பொழுது
வெள்ளி மறைந்து வான் கைம்பெண் ஆயிற்று
என் காலகடிகாரம் கணீரென ஒழிக்க
போர்வையில் தஞ்சம் இருந்த நான்
மெல்ல விலக்கி விடுதலை ஆனேன்
இன்னும் இரவு தொடரக்கூடாதா
பகலவன் ஓய்வெடுக்கக் கூடாதா
என் மனம் அங்கலாய்த்தது
என் புலம்பலுக்கு செவிமடுத்து
காலச் சக்கரம் என்ன நின்றா போய்விடும்
என் கால்கள் பலகணி நோக்கின
பால் காரன் பேபர் காரன்
பூக்காரி கீரைக் காரி
என அடுக்கடுக்காய் தோன்றி
தனெக்கென தனி பாணியில் கூவி
வீதியில் வலம் வந்தனர்
இது என் காலை விருந்து
பின் சமையலறை ஏகினேன்
என் நளபாகம் தொடங்கியது
கைகளும் கால்களும் மின்னெலென இயங்கின
கால தேவனுடன் போட்டியிட்டபடி
மருத்துவமனை செல்லும் என் தலைவன்
கல்லூரி செல்லும் ஆசை மகள்
பள்ளி செல்லும் செல்ல மகன்
ஆயத்தப் படுத்தி வழியனுப்பினேன்
ஒருவழியாக பெரும் பணி நடந்தேறியது
அப்பாட என அமரவா முடியும்
அடுத்துக் காத்திருப்பது என் பணி அல்லவா
குடும்பம் ஒரு கண் என்றால்
பள்ளிப் பணி மறு கண் அல்லவா
சிட்டுக் குருவியின் கொஞ்சல்
எனை நாடி வரும் காக்கை நண்பரின்
கனிந்த கரைந்த குரல்
பாடும் வெண் புறா
மாமரம் தேடி வந்து
கீச்சிடும் அணில் பிள்ளை
இவை நாளும் நான் ரசிக்கும் பூபாளம்
காற்றில் சலசலக்கும் தென்னங்கீற்று
நான் விரும்பி கேட்க்கும் சுப்ரபாதம்
கலைந்து கிடக்கும் படுக்கை
செல்ல மகனி பந்தாட்டத்தால்
சிதறிக் கிடக்கும் பொருள்கள்
அத்தனையும் சரிசெய்து
ஆயத்தமானேன் என் பணிக்கு
குளியல் ஆடை அணிவிப்பு ஒப்பனை
மல மளவென முடிந்தது
விரைந்தேன் வீட்டு வாசலுக்கு
ஆட்டோ ஓட்டுனரின் அழைப்பொலி கேட்டு
வழியில்
பேருந்துக்கு விரையும் மக்கள்
இரவில் உண்ட மதுவால் மயங்கி
வீதியில் கிடக்கும் ஆண்கள்
வானமே கூரை வீதியே படுக்கை
என நலிந்து வாழும் நாடோடிக் கூட்டம்
பூங்காவான பூக்கள் போல
பள்ளி செல்லும் மாணவர்கள்
நடை பாதை வோர வியாபாரம்
அவரிடம் வசூல் வேட்டை நடத்தும்
போக்குவரத்து காவலர்
தனெக்கென தனி விதிமுறையில்
தாறு மாறாக ஓட்டும் ஷேர் ஆட்டோக்கள்
செய்தித்தாளுடன் தேநீர் அருந்தி
ஊர் வம்பு பேசும் நண்பர் கூட்டம்
நன் அயராது ரசிக்கும் காட்சிகள்
வழியில் காணும் மாணவர்களின்
அன்பு கலந்த காலை வணக்கம்
பள்ளி நெருங்கியதை அறிவுறுத்தியது
காலை வணக்கம் பின் வகுப்பறை நுழைந்தேன்
ஊர் சென்ற அன்னைக்காய்
காத்திருக்கும் கண்மணிகள் போல்
எனைக் கண்டவுடன் அகம் மலர்ந்து
உளம் கிளர்ந்து வணங்கிய மாணவர்கள்
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா
என உள்ளம் துள்ளி எழுந்தது
வீடு மறந்தது வீதியில் கண்டது மறந்தது
உலகம் மறந்து ஒருமனமானேன்
என் அகவை மறந்து சிறு கிள்ளையாநேன்
மழலையோடு மழலையாய் மாறி உட் புடுந்தேன்
No comments:
Post a Comment