ஓங்கி உயந்த இமய மலை
விண்ணை முட்டும் எவரஸ்டு
பசுமை மாறா சமவெளிகள்
பாய்ந்து ஓடும் ஜீவ நதி
உறவுக்கு கை கோர்க்கும் தென் ஆறுகள்
வரவுக்கு வழிவிடும் கனவாய்கள்
மோதும் அலையுடன் கடற்கரைகள் - இவை
யாவும் நம் தாயின் அவயங்கள்
நம்மில் மணக்கும் ஆங்கிலம்
நம்மை இணைக்கும் நெடும் பாலம்
நமக்கு உதவும் ஆட்சி மொழி
ஹிந்தி என்னும் நம் தேச மொழி
தேனை ஊறும் அமுத மொழி - அதுவே
தமிழென்னும் நம் தாய் மொழி
தெலுங்கு துளுவம் மலையாளம் - இவை
யாவும் நம் தாயின் செப்பு மொழி
அன்பை போதித்த புத்த மதம்
அகிம்சை போதித்த ஜைன மதம்
ஆன்மிகம் போதித்த இந்து மதம் - இது
அத்தனையும் பிறந்த தாயின் மடி
ஈகையை போதிக்கும் இஸ்லாம்
இரக்கத்தை போதிக்கும் கிறிஸ்துவம்
இத்தனை மதம் இங்கிருத்தும்
அன்பே என் தாயின் மதமாகும்
பல வண்ண வனப்பு நீ கொண்டாய்
பல மொழிகள் பேசி நீ நின்றாய்
அன்பே மதமாய் நீ கொண்டாய்
அகிம்சை வழியில் நீ வென்றாய்
இத்தனை வேற்றுமை தன்னிடமே
இருப்பினும் ஒற்றுமை உன்னிடமே
உணர்வால் எம்மை இணைதாயே - தாயே
வாழிய! வாழிய! வாழியவே!
No comments:
Post a Comment