காற்றும் வெயிலும் மழையும்
அனிமதி இன்றி நுழையும்
சாலை ஓரம் முளைத்த
ஓலையில் கட்டிய வீடு
பகலவன் பணியை முடித்து
தலை சாயும் நேரம்
உடைந்து பூசிய மண்னடுப்பு
அதில் உள்ளே மூன்று காய்ந்த வரட்டி
பொறுக்கி வந்த சுள்ளி விறகு
பசித்தவன் வயிறு போல்
வேகமாய் எரியுது அடுப்பு
பணம் பறிகொடுத்தவன் மனசு போல்
வேகமாய் கொதிக்குது உலையும்
கூலி வாங்கி மளிகை வாங்க
போன கணவனுக்காய் காத்திருந்தாள் அவள்
பசியில் சோர்ந்து பிள்ளைகள்
வழி தேடி அயர்ந்தது கண்கள்
நேரம் யுகமாய் சென்றது
எங்கும் இருள் சூழ்ந்தது
வானம் பார்த்த பூமி போல்
வரண்டு போயின நாவுகள்
வாடிய பிஞ்சுகளின் முகம் கண்டு
துவண்டு போனது அவள் உள்ளம்
கட்டிய கணவனை காணவில்லை
தேடி வீதியில் புறப்பட்டாள்
ஆதாரம் இல்லாத கொடி போல
ஆடி போதையில் வந்தான் கணவன்
இது நாளும் நடக்கும் சம்பவம்தான்
பொறுத்து பொறுமை இழந்தாள்
உள்ளம் வெகுண்டு எழுந்தாள்
உரக்கக் கத்தினால் உள்ளக் குமுறலில்
உனக்கு குடும்பம் ஒரு கேடா?
No comments:
Post a Comment