Thursday, 22 December 2011

வேதங்கள் திருத்தப்படட்டும் - தமிழ் கவிதைகள்


கணவனை இழந்தோர் கைம்பெண்
கைவிடப் பட்டோர் வாழாவெட்டி
பிள்ளைப்பேறு பெறாதவள் மலடி
இப்படி எத்தனை எத்தனை பெயர்கள்
பெண்ணே உனக்கு மட்டும்
நீ என்ன களர் நிலமா
வேதா விற்பனர்கள் கூறுவது போல்

முளையாத வித்துக்களை பூமியிலே தெளித்திட்டால்
விளை நிலங்கள் எல்லாம்
விளைச்சலையா தந்திடும்
தரிசுகளை பண்படுத்தி
தறிகெட்ட புதர்களை நீக்கிட
போர்கோலம் பூண்டிடுவீர்
பாலைவனங்கள் கூட
சோலைவனமாய் மாறிவிடும்

நல் நீரூற்று அங்கே வந்தால்
சாகடிக்கும் சாத்திரங்களை
சாய்ந்து போக போரிடுவீர்

வம்பு பேசி வீணடிக்கும் வேதங்களை
வேரோடு சாய்த்திடுவீர்
தரிசு நிலத்தை மேய வரும்
தறிகெட்ட கால்நடைகளை
வேலிஇட்டு விரட்டி
நடுவீதியிலே விட்டிடுவீர்
பொருத்தது போதும்
வேதங்கள் திருத்தப்பட
பொங்கி எழு மகளே

-வை.அமுதா

No comments:

Post a Comment