Thursday, 22 December 2011

கடவுள் கல்லானார் - தமிழ் கவிதைகள்



அன்று

வேதங்கள் சொல்கிறது
தட்டினால் திறக்கப்படுமாம்.
கேட்டால் கொடுக்கப்படுமாம்.

இன்று

பரதேசி வேண்டினான் கால் நடையாய் நான் வருவேன்.
பாமரன் வேண்டினான் தலைசிகையை நான் தருவேன்.
பணக்காரன் வேண்டினான் பல கோடி நான் தருவேன்.
வேண்டுதல் அனைத்தையும் நிறைவேற்றி விட்டால் நீ
வேண்டுதல் என்ன வியாபாரமா?
பக்தி என்ன பண்டமாற்றமா?
வியந்து உறைந்தான் இறைவன்
கலங்கி கண்மூடி கல்லாய் அமர்ந்து விட்டான்.

- வை. அமுதா

No comments:

Post a Comment