ஒற்றைப் பனைமரம் ஒன்று
ஓங்கி நிமிர்ந்து நிற்கிறது
கிளையிட அதற்க்கு வழியில்லை
அதில் பறவைகள் ஏதும் தங்கவில்லை
நாணல் போல் அது வளையவில்லை
நானிலத்தில் யார்க்கும் அஞ்சவில்லை
இயற்க்கை சீறி அதை தீண்டினாலும்
இயைந்து சற்றும் கொடுக்கவில்லை
இளைப்பாற அதற்க்கு நிழல் இல்லை
இருந்தும் அது சற்றும் தளரவில்லை
பல வகையில் பலன் தருகிறது
பலனை மட்டும் எதிர் நோக்கவில்லை
பார்க்க முரடாய் தோன்றினாலும்
பருகும் இனிமைத் தருகிறது
காற்றுத் தேவன் கடுமை இருந்தும்
பூமித்தாயின் பிடியில் நிற்கிறது
வாழ்க்கை என்னும் பாதையிலே
நாம் பயணம் செய்து போகையிலே
பல பனைமரம் நடுவில் நிற்கின்றன
நமக்கு பலனைத் தந்து மறைகின்றன
கண்டும் காணாமல் நாம் சென்றாலும்
நம் கருத்தில் புகுந்து நிறைகின்றன !
நல்ல கவிதை
ReplyDeleteArumai
ReplyDelete