
இரவு முழுதும் இலைகளுக்குள் உறக்கம்
இதழ்களை சிலிர்த்து உறக்கம் கலைத்தேன்
பகலவன் காலடி கேட்கும் முன்னே
பனித்துளியில் தலை நனைத்தேன்
கண்சிமிட்டி குவலயம் நோக்கினேன்
பனிக் காற்று என்னை சீண்டிச் சென்றது
இருள் மறைந்து ஒளி நிறைந்தது
மொட்டவிழ்ந்து மலரானேன்
தலைவன் பார்வை பட்டவுடன்
நாணத்தில் கவிழ்ந்த மங்கைப் போல்
கதிரவன் மோகப் பார்வையிலே
தலை சாய்த்து மண் நோக்கினேன்
மாலை மங்கை தோழமையில்
மணம் வீசி உளம் குளிர்ந்தேன்
எனை காதலில் வாட்டிய இளங்கதிரோன்
கடல் மங்கை மடி சாய்ந்தான்
தாளவொன்னா துயரத்தில்
தளர்ந்து உலர்ந்து மண் மடி சேர்ந்தேன் !
superb tamil kavithai - faizel
ReplyDeletearumai iyalbai iyalbaha cholliyulla kavithai
ReplyDelete