
வலிமை கொண்ட காற்றே
வண்மைக் கொண்ட காட்டாறே
தடைகள் ஏதும் உனக்கில்லை
தடுக்கவும் எவரால் முடியவில்லை
உன் சீற்றம் கண்டு அஞ்சுகிறார்
சினத்தை கண்டு ஒஞ்சுகிறார்
இயற்கையில் வரும் மாற்றங்கள்
இயல்பானவை என ஏற்கின்றார்
இடையூறுகள் அதில் இருப்பினும்
இயற்கையின் நியதி என்கின்றார்
மங்கையின் மனமும் புதுப் புனல் தான்
வேகத் தடை போட்டு பயனேதும் இல்லை
தன்னம்பிக்கை கொண்டு தடைகளை மீறி
களிறு நடை போடும் புதுமைப் பெண்ணை
வேலி தாண்டிய வெள்ளாடு என
அடையாளம் காட்டிடாதீர்
மாற்றம் என்பது மானிட தத்துவம்
மாறும் உலகின் மகத்துவம் அறிவீர்
தனக்கென ஒரு தனி பாதை வகுக்கும்
பெண்ணின் உள்ள உணர்வுகள்
இயற்கையில் நிகழும் இயல்பான மாற்றமே
சாஸ்த்திரங்கள் சம்பிரதாயங்கள்
சமூகக் கட்டுப் பாடுகள் என
இருட்டறைக்குள் தள்ளிடாதீர்
வேலியிட்டு முடக்காதீர்
வெந்தணலில் வீசாதீர்
நீண்ட வான்வெளியை மடக்கிட முடிவதில்லை
ஓயாத அலைக்கு ஆணையிட எவருமில்லை
தனித்துவம் காட்டிட பெண்ணினமே
தடைகளை மீறி வந்துவிடு
தன்னம்பிக்கையுடன் போராடு
மனதில் கொண்ட எண்ணங்களை
நன உலகில் புதியதாய் சமைத்துவிடு !!
கவிதைகள் அனைத்தும் அருமை. மரணத்துள் வாழ்வோம் என்ற கவிதை தொகுப்பை http://www.valaitamil.com/literature_poem என்ற வலை தளத்தில் பார்த்தேன். அந்த கவிதை தொகுப்பு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நீங்களும் படித்து பாருங்களேன்.
ReplyDeleteகவிதைகள் அனைத்தும் அருமை
ReplyDeleteசிறந்த எழுத்துக்கள் சிந்திக்க வைக்கின்றன.
தொடருங்கள்..!