Wednesday, 4 January 2012

காற்றே....



நீ என்ன என் அந்தரங்க தோழனா 
அனுமதி இன்றி அறையில் நுழைகிறாய் 
அரவம் இன்றி தாழிடுகிறாய் 
சில்லென பட்டு என் மேனி சிலிர்க்கிறாய் 
என் ஆடையை தொட்டு ஆவல் கொள்கிறாய் 
துவண்ட என் உள்ளம் கண்டு 
அகன்ற உன் கரங்கள் கொண்டு 
அணைத்திட நீ வந்தனையோ 
உன் தோழமை அன்பு கண்டு 
என் தூரிகையும் நெகிழ்ந்தது இன்று. 

வை.அமுதா

No comments:

Post a Comment