Wednesday, 4 January 2012

பிறக்கட்டும் தீவிரவாத அண்ணல் காந்தி


ஜாதி என்னும் புற்று நோய் 
கொள்ளை ஆட்டம் போடுது 

மதம் மதபிடித்த யானைகள் 
யாத்திரிகை போகுது 

அரசியல் ஆதரவு திமிரில் 
கொள்ளை பணம் சேர்த்து 
கோபுரம் கட்டி கொடியேத்துது 

ஊழலும் லஞ்சமும் 
ஊரில் ஊஞ்சல் கட்டி ஆடுது 

நிர்வாக சீர்கேடுகள் 
நிதி திரட்டி வந்து 
திருவிழா கொண்டாடுது 

நிதிக் கம்பனி மோசடி 
சதிராட்டம் ஆடுது 

பதவிகளை பாதுகாக்க 
பணம் பந்தாடுது 
பாதியிலே போய்விட்டால் 
கட்சி தாவல் நடக்குது 

பணம் கட்டாய் கண்டவுடன் 
நீதி தேவதை கூட 
கண்ணாம்பூச்சி ஆடுகிறாள் 

சமூக சேவைகள் 
சம்பாத்தியம் பண்ணுது 
சாக்கடை புழுக்களாய் 
மக்கள் வாழ்வு நடக்குது 

தூரெடுத்து சுத்திகரிக்க 
மீண்டும் வந்து பிறக்கட்டும் 
தீவிரவாத அண்ணல் காந்தி 

No comments:

Post a Comment