புத்தாண்டு பெண்ணே வருக !
புத்தாண்டு பெண்ணே வருக
புதுப் பொலிவு பூமியில் பெருக
வெண்ணிற ஆடையில் வருக
அமைதியை உலகில் நிறுவ
பொன்னிற உன் மேனி ஒளிர்க
அதில் புவியில் ஞானம் மிளிர்க
எண்ணிய யாவும் கைப்பட
திண்ணிய மன உறம் தருக
கற்பகத் தருவாய் வருக
மண்ணில் வளம் பெருக
யான் நினைத்தவை யாவும் தருக
இன்பங்கள் எங்கும் பெருக !
No comments:
Post a Comment